50 வீதத்தால் அதிகரிக்கின்றது மரக்கறிகளின் விலை!

அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 வீதம் அதிகரிக்கலாம் என்று கொழும்பு மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சந்தைக்கு வரும் மரக்கறியை ஏற்றிய சுமை ஊர்திகளின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டால் மரக்கறிகளை ஏற்றி வரும் சுமை ஊர்திகள் சந்தைக்கு வர தாமதமாகின்றன. தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால், மலையக பிரதேசங்களில் லீக்ஸ், கரட் ஆகியவற்றின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மரக்கறிகள் உரிய காலப்பகுதிக்குள் கொழும்புக்கு வரவில்லை என்றால், அவை பழுதடைந்து விடக்கூடும். இந்த நிலை ஏற்பட்டால் மரக்கறிகளின் விலையும் அதிகரிக்கப்படலாம்.

இதனைத் தவிர போஞ்சி, தக்காளி, கறி மிளகாய் ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை ஒரு கிலோ 500 முதல் 700 ரூபாவாக அதிகரித்துள்ளன.
அவற்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவைத் தாண்டியுள்ளது என்றும் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version