பிரதான செய்தி

யாழில் இருந்து சென்னைக்கு அடுத்தவாரம் தொடங்கும் நேரடி விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம் இரத்மலானை மற்றும் சென்னை போன்ற இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த தகவலை வட மாகாண செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இந்த சேவை முன்னெடுக்கப்படும்.

கொரோனா காலப்பகுதில் விமான சேவைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரைவில் செயற்படுத்துமாறு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214