உலகச் செய்திகள் செய்திகள்

43 ஆண்டுகள் விடுமுறை பெறாமல் சேவையாற்றிய பொலிஸ் அதிகாரி

43 வரு­டங்­க­ளாக லீவு (விடுமுறை) எதுவும் பெறாமல் பணி­யாற்­றிய ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் பொலிஸ் அதி­காரி ஒருவர் கௌர­விக்­கப்­பட்­டுள்ளார்.

அப்­துல்­ரஹ்மான் ஒபைத் அல் துனாஜி எனும் பொலிஸ் அதி­காரி ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் பொலிஸ் திணைக்­க­ளத்தில் போக்­கு­வ­ரத்து மற்றும் ரோந்துப் பிரிவில் பணி­யாற்­று­பவர். இவர் விடுப்பு எதுவும் பெறாமல் 43 வரு­டங்­களை பூர்த்தி செய்­துள்ளார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­துல்­ரஹ்மான் ஒபைத் அல் துனா­ஜியை கௌர­விக்கும் விழா அண்­மையில் நடை­பெற்­றது. அவ­ருக்கு ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் பொலிஸ் தலைமை அதி­கா­ரி­யான மேஜர் ஜெனரல் அல் அப்­துல்லா பின் அல்வான் அல் நுவைமி விருது வழங்கி கௌர­வித்தார்.

அப்­துல்­ரஹ்மான் ஒபைத் அல் துனாஜி தொழில்சார் தன்­மைக்கும், நேரம் தவ­றா­மைக்கும் ஒரு முன்­னு­தா­ரண­மாக விளங்­கு­கிறார் என மேஜர் ஜெனரல் அல் அப்­துல்லா பின் அல்வான் அல் நுவைமி கூறினார். இதே­வேளை, கௌர­விக்­கப்­பட்ட அப்­துல்­ரஹ்மான் ஒபைத் அல் துனாஜி கருத்துத் தெரி­விக்­கையில் “நான் எனது கடமையையே செய்தேன்” என்றார்.

Related posts

தாக்குதலை கண்டித்து போராட்டம்; குழப்ப முயன்ற ஈபிடிபி

கதிர்

நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கலாம்

reka sivalingam

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

G. Pragas