in

இராஜாங்க அமைச்சரைக் கைது செய்யுமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தல்!

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரைக் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இராஜாங்க அமைச்சரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர், தமிழ் அரசியல்  கைதிகள் இருவரை முழந்தாளிட செய்துள்ளதாகவும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்!

அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு ஐ.நா பிரதிநிதி கண்டனம்!