in ,

கொக்குத்தொடுவாய் வயல் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம்!

கொக்குத்தொடுவாய் வயல் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம்!

தமிழ் மக்களுக்கு சொந்தமான கொக்குத்தொடுவாயில் உள்ள வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்து கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்குரித்தான பூர்வீக விவசாய நிலங்கள் பலவற்றை வெலி ஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து ஆக்கிரமிப்புச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைக் கண்டித்து கரைதுறைப் பற்று பிரதேசசபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்த அமர்வில் சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை சிவலிங்கத்தால் குறித்த கண்டனத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

ஏற்கனவே கொக்குத்தொடுவாய் தமிழ் மக்களின் மணலாற்றுப் பகுதியிலுள்ள பல்லாயிரக்கணக்கான பூர்வீக நீர்ப்பாசன பயிர்ச்செய்கை நிலங்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையோடு பெரும்பாண்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் எஞ்சியுள் மானாவாரி விவசாய நிலங்களையும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமிக்க முனைவது கண்டிக்கத்தக்கது என சபை உறுப்பினர் சிவலிங்கம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தீர்மானத்தை சபை உறுப்பினர் க.தவராசா வழிமொழிய ஏனைய உறுப்பினர்களும் இக் கண்டனத் தீர்மானத் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இக்கண்டன தீர்மானத்தை உரியதரப்பினருக்கு அனுப்பிவைப்பதாக தவிசாளர் க.விஜிந்தனால் தெரிவிக்கப்பட்டது.

யாழ். பல்கலை மருத்துவபீட தகவல் தொழில்நுட்பக் கூடம் திறந்து வைக்கப்பட்டது!

மது, புகைத்தல் பொருளுக்கு வரி விதிப்பை அதிகரியுங்கள்! சாவ. பிரதேச சபை தீர்மானம்!