உலகச் செய்திகள்

அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு! 13 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்கு பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 13 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051