in ,

இணைய பாலியல் குற்றங்கள் தொடர்பில் 3 மாதத்தில் 3000 முறைப்பாடுகள்!

இணைய பாலியல் குற்றங்கள் தொடர்பில் 3 மாதத்தில் 3000 முறைப்பாடுகள்!

பாலி­யல் குற்­றங்­கள், ஆபாச வீடி­யோக்­கள் மற்­றும் ஒளிப் படங்­களை இணை­யத்­தில் வெளி­யி­டு­வது தொடர்­பாக கடந்த 3 மாதங்­க­ளுக்­குள் சுமார் 3 ஆயி­ரம் முறைப்­பாடு ­கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.
இந்­தத் தக­வலை சி.ஐ.டியின் கணினி குற்­றப் பிரிவு வெளி­யிட்­டுள்­ளது.

15 வயது சிறு­மியை இணை­யத்­தின் மூலம் விற்­பனை செய்து, துஷ்­பி­ர­யோ­கம் செய்த முறைப்­பாட்­டில் சுமார் 70 சந்­தே­க­ந­பர்­கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.
இதற்­கி­டை­யில் பேஸ்­புக் மூலம் இடம்­பெ­றும் துஸ்­பிர­ யோக சம்­ப­வங்­கள் தொடர்­பில் சுமார் 900 முறைப்­பா­டு­கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

பேஸ்­புக் கணக்­கு­களை ஹேக் செய்­வது மற்­றும் போலிக் கணக்­கு­களை பரா­ம­ரிப்­பது தொடர்­பாக சுமார் 700 முறைப்­பா­டு­கள் கிடைக்க ப்பெற்­றுள்­ளன என்று சி.ஐ.டி யின் கணினி குற்­றப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

வைரஸ் பர­வல் கட்­டுப்­பாட்­டில் இல்லை அதனால் நாட்டை முழுமையாகத் திறக்க சாத்தியமில்லை!

தவறாக விளங்கிய கர்ப்பிணிகள் கருவைக் கலைப்பதற்கு முயற்சி!