உலகச் செய்திகள்செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

உலகின் அழுக்கு மனிதர் குளித்ததால் உயிரிழந்தார்

65 ஆண்டுகளா குளிக்காமல் இருந்த ஈரானைச் சேர்ந்த, உலகின் மிக அழுக்கான மனிதர் தனது 94வது வயதில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக தன் உடலில் சோப்பு, தண்ணீர், மழைநீர் எவையும் தன் உடலை நனைக்காது வாழ்ந்து வந்துள்ளார்.

குளிப்பது தனது உடல்நலத்தை பாதிக்கும் என அவர் நம்பி இத்தனை ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரின் இறப்புக் குறித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது:

கடந்த 2013ல் இவரைப் பற்றி “ The stranger life of Amou haji” என்ற,ஆவணப்படம் வெளியானது.

வர் சாலையோரங்களில் இறந்துகிடக்கும் விலங்குகளை உணவாகவும், அதன் கழிவுகள் கொண்டு தானே தயார் செய்யும் சிகரெட்டைக் குடித்து வந்ததாகவும், தொடர்ந்து ஒரே நேரத்தில் அதிக சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவர் இவர் எனவும் அந்த ஆவணபப்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மையாக, சுத்தமாக இருப்பதே நோய்வாய்ப்பட காரணமாக இருக்கும் என அவர் இறுதிவரை நம்பினார்.

“சிறுவயதில் அவருக்கு நேர்ந்த சில உணர்ச்சிகரமான சம்பவத்தால் அவர் தண்ணீர் மற்றும் சுத்தத்தை அறவே வெறுத்துவிட்டார்.

சில மாதங்களுக்கு முன் நாங்கள் மிகவும் கட்டாயப்படுத்தி அவரைக் குளிக்க வைத்தோம்”

இந்தநிலையில் உடல்நலம் சரியில்லாமல் போனதால் அவர் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார் என கவலை தெரிவித்தனர்

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282