செய்திகள்பிரதான செய்திமலையகம்

குழந்தையை கால்வாயில் வீசிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது!

8 வயது குழந்தையை கால்வாயில் வீசியதாக கூறப்படும் கிராம சேவை உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொல்கஹவெல உடபொல கிராம சேவை உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் பொல்கஹவெல பிரதேசத்தில் சம்பவம் பதிவாகியுள்ளது.

ஒரு கால்வாய் கரைக்கு அருகில் இருந்து யானை குளிப்பதை குழந்தை பார்த்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடிபோதையில் கரையோரம் வந்த குறித்த கிராம சேவை உத்தியோகத்தர் குழந்தையை தூக்கி கால்வாயில் வீசியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கால்வாயில் வீசப்பட்ட குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

54 வயதான சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282