இந்திய செய்திகள்செய்திகள்

இலங்கைத் தமிழருக்கான உதவிகள்; தெலுங்கானா ஆளுநரும் ஆராய்வு!

இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியுடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டப் பணிகளை மத்திய இணை அமைச்சர் ஆய்வு செய்துவருகிறார். இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான உதவிகள் குறித்து மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சந்திப்பின் போது வெளியுறவுத்துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் பற்றியும், புதுச்சேரியில் நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலாசார நிகழ்வுகளை நடத்துவது பற்றியும் மற்றும் பல மத்திய அரசு சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியும் புதிய திட்டங்கள் கொண்டு வருவது பற்றியும் விவாதித்தார்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282