வடக்கு – கிழக்கு விவசாயிகள், மீனவர்களுக்கு நன்கொடையாக மண்ணெண்ணெய்

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக நன்கொடையாக மண்ணெண்ணெய் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்திய அரசு ஏற்கனவே தீவகப் பகுதி மீனவர்களுக்காக 75 பரல் மண்ணெண்ணெயை நன்கொடையாக வழங்கியிருந்தது.
இதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள், அரசியல் தலைவர்கள் மண்ணெண்னெயை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அந்தக் கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலித்த இந்தியா, சுமார் இரண்டரை லட்சம் லீற்றர் மண்ணெண்ணெயை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Exit mobile version