உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்தி

பிலிப்பைன்ஸ் மாணவர்கள் விநோத முறையில் பரீட்சை

பிலிப்பைன்ஸ் நாட்டில் பரீட்சையின்போது மோசடி இடம்பெறாத வண்ணம் மாணவர்கள் வித்தியாசமான முறைகளில் தொப்பிகள் அணிந்து பரீட்சை எழுதியுள்ளனர்.

பரீட்சை எழுதும் போது சக மாணவர்கள் பார்த்து எழுதுவதை பார்க்க முடியாத வகையில் பிலிப்பைன்ஸிலுள்ள லேகாஸ்பி நகரிலுள்ள பைகோல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியால் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய மாணவர்கள் சாதாரணமான தொப்பி அணியாது விதவிதமான வித்தியாசமான தொப்பிகளை தயாரித்து பரீட்சை நிலையத்துக்கு வந்து பரீட்சை எழுதியுள்ளனர்.

சாதாரண வடிவமைப்பு முறையில் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கியதாகவும் ஆனால் மாணவர்கள் தமது எண்ணங்களுக்கு ஏற்ப வித்தியாசமான வடிவமைப்புகளை மேற்கொண்டுள்ளனர் என விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266