in ,

வவுனியாவில் கொரோ­னாத் தொற்றால் இருவர் சாவு! 20 பேருக்குக் கொரோனா!

வவுனியாவில் கொரோ­னாத் தொற்றால் இருவர் சாவு! 20 பேருக்குக் கொரோனா!

வவு­னி­யா­வில்  20 பேருக்­குக் கொரோ­னாத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் இரு­வர் தொற்­றுக்கு உள்­ளாகி உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்று சுகா­தா­ரப் பிரி­வி­னர் தெரி­வித்­த­னர். வவு­னி­யா­வில் கொரோ­னாத் தொற்­றா­ளர்­க­ளு­டன் தொடர்­பு­க­ளைப் பேணி­ய­வர்­கள், வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­கா­கச் சேர்க்கப்­பட்­ட­வர்­கள் ஆகி­யோ­ருக்­கும் மற்­றும் எழு­மா­றாக மேற்­கொள்­ளப்­பட்ட பி.சி.ஆர். மற்­றும் அன்­டி­ஜென் பரி­சோ­த­னை­க­ளின்­போ­தும் பெறப்­பட்ட முடி­வு­கள் நேற்­று­முன்­தி­னம் இரவு வெளி­யா­கின.

அதன்­படி மேற்­படி எண்­ணிக்­கை­யான தொற்­றா­ளர்­கள் இனங்­கா­ணப்­பட்­ட­னர்.
வவு­னியா, வவு­னியா வடக்கு, செட்­டி­கு­ளம், வவு­னியா தெற்கு ஆகிய பிரி­வு­களை உள்­ள­டக்­கி­ய­தாக 20 பேருக்கே தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்­த­நி­லை­யில், தொற்­றா­ளர்­க­ளை­யும், அவர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளை­யும் சுய தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கும் சுகா­தா­ரப் பிரி­வி­னர் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர்.

வவு­னி­யா­வில் அண்­மைய நாள்­க­ளாக தொற்­றா­ளர்­க­ளின் எண்­ணிக்கை சடு­தி­யா­கக் குறை­வ­டைந்து செல்­கின்­றது. நேற்­று­முன்­தி­னம் வெளி­யா­கிய முடி­வு­க­ளில் 26 பேருக்­குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

காற்றால் அதிகம் பரவும் புதிய திரிபு வைரஸ்கள்!

கொரோ­னா­வால் யாழில் ஒரு­வர் சாவு! சுகா­தா­ரத் தரப்­பி­னர் விசேட அறிவித்தல்!