கிளிநொச்சிசெய்திகள்

எரிபொருளிற்காக இரவு பகலாக அலைந்து திரிய வேண்டிய நிலை என மக்கள் கவலை!

எரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிப்பு

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான நெருக்கடி நிலைமை காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படாத காரணத்தினால் எரிபொருள் பெறுவதில் மக்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எரிபொருள் பெற வேண்டுமாயின் அதிகாலை 2 மணிக்கு எழுந்து வரிசையில் நின்று காலை 10 மணி அளவில் எரிபொருள் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமது நாளாந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் முலலைத்தீவு
மாவட்டத்துக்குட்பட்ட விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 கிலோ மீற்றர்ருக்கும் அதிகமான தொலைவில் வரிசையில் நின்று எரிபொருளை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941