in ,

மாநகரசபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி! பொலிஸாருக்குக் கண்டனம்!

மாநகரசபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி! பொலிஸாருக்குக் கண்டனம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் நேற்றைய அமர்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, அஞ்சலி நடவடிக்கையில் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.இதன்போது சபையின் ஆரம்பத்தில் தியாக தீபம் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து கடந்த 23 ஆம் திகதி யாழ். மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை பொலிஸார் காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடைபெற்ற தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வில் EPDP  மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்ட சேதனப் பசளையில் ஆபத்தான பக்டீரியா!

அச்சுவேலியில் 2 வாள்களுடன் ஒருவர் கைது!