சீனாவிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பக்டீரியா உள்ளமை இரண்டாவது தடவையாகவும் மேற்கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
பசளை மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறித்த பரிசோதனையில் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டதாகவும் விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த சேதனப் பசளையை நாட்டிற்கு இறக்குமதி செய்வதை தவிர்க்குமாறு தாம் வலியுறுத்துவதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.