செய்திகள்முல்லைத்தீவு

நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – மல்லாவி, திருநகர் பகுதியில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருநகர் பகுதியில் நேற்றிரவு 12 பேர் கொண்ட நண்பர்கள் குழாம் மதுபான விருந்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. திருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவிப் பெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282