நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாமல்லபுரத்திலுள்ள நட்சத்திர விடுதியில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் நேற்று திருமணபந்தத்தில் இணைந்துள்ளனர். நிகழ்வில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய்சேதுபதி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி
ஆகிய நட்சத்திரங்க ளும், நட்சத்திர தம்பதிகளான உதயநிதி ஸ்டாலின் – கிருத்திகா, மணிரத்னம்- சுஹாசினி, சரத்குமார் – ராதிகா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கெளதம் வாசுதேவ் மேனன், அட்லி, சிறுத்தை சிவா, ஹரி, தயாரிப்பாளர் டோனி கபூர் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்களும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.