தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கவனம் என எச்சரித்துள்ளார் சுரேஸ் பிரேமச்சந்திரன்!

பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணிலின் முதல் வேலை மக்களை மூன்று வேளையும் சாப்பிட வைப்பதும் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதும் தான் என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

ரணிலிடம் இனப்பிரச்சினை தொடர்பான எந்த எண்ணமும் இல்லை, தனக்கான ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏதாவது சொல்லலாம்,  கூட்டமைப்பு கவனம் என எச்சரித்துள்ளார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக கூட்டமைப்பிடம் இனப்பிரச்சனை சார்ந்த விடயங்களைக் கூறி ஆதரவைப் பெற முயற்சிக்கக் கூடும், கூட்டமைப்பு அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தர்.தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அவரின் பிரதான நோக்கம் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதும் மக்களை மூன்று வேளையும் சாப்பிட வைப்பதும் என தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் கூட்டமைப்பின் ஆதரவு இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தை முன்வைக்க கூடும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதாக தெரிவித்து. சம்மந்தன், சுமந்திரன் ஆதரவு தெரிவித்த போதும் எதுவுமே நடைபெறவில்லை சூடு கண்ட பூனைபோல் கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்றார்.

Exit mobile version