செய்திகள்

49-வது இலக்கியச் சந்திப்பு

49வது இலக்கியச் சந்திப்பு வன்னி கிளிநொச்சியில் எதிர்வரும் செப்டம்பர் (21), (22) ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியிலுள்ள பிராந்திய கால்நடை அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தாயகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் வருகின்றவர்களுடன் புலம்பெயர் தேசங்களின் கலை, இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர்களும் பங்கேற்கின்றனர்.

கலை இலக்கியம், சம கால சமூகப் பிரச்சினைகள், போர், போருக்குப் பிந்திய காலச்சூழல், ஜனநாயக நிலவரம், பண்பாட்டு அசைவுகள் எனப் பல விடயங்களை உள்ளடக்கி நான்கு அமர்வுகளில் 16 தலைப்புகளில் பல்வேறு ஆளுமைகள் உரையாற்றுகின்றனர். தொடர்ந்து விரிவான உரையாடல்களும் விவாதங்களும் இடம்பெறும்.

இரண்டு நாள் அமர்வுகளிலும் பங்கேற்போருக்கான தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (எஸ்.கே)

Related posts

பேருந்துக்குள் வைத்து ஒருவர் சுட்டுக்கொலை!

G. Pragas

10 மணி வரை 69 வன்முறைகள்

G. Pragas

தமிழர்களுக்கு கோத்தாவினால் மட்டுமே தீர்வு தர முடியும் – அங்கஜன்

G. Pragas

Leave a Comment