செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வடபகுதியின் இன்றைய கொரோனா நிலவரம்!

வடபகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்று யாரும் இதுவரை கண்டறியப்படவில்லை என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது மூவர் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

அவர்களது பரிசோதனை முடிவுகள் இன்று (22) மாலை கிடைக்கும்.

நேற்று(21) மாலை வரை தொற்றுக்கு உள்ளான ஒருவரும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் எமது பகுதியில் தொற்றுக்கு உள்ளானவர்கள் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் சுகாதார அமைச்சின் அனைத்து நடைமுறைகளையும் கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

என்று கருத்து தெரிவித்தார்.

Related posts

மார்ச்சில் விடிவு கிடைக்குமா?.

G. Pragas

இலங்கையர்கள் இருவருக்கு “பத்ம ஸ்ரீ” விருது!

G. Pragas

புலம்பெயர் தமிழர்களின் முதலாவது மாவீரர் தின நிகழ்வு! நியூசிலாந்தில் திரண்ட தமிழர்கள்!!

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.