in , , ,

50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை மற்றும் சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு!

1970 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கூட்டு முத்திரை வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்கிழமை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இணையவழி ரீதியாக இணைந்து கொண்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டதுடன், அவை கடல் சூழலைப் பாதுகாப்பதில் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பாக ‘கடல் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை சித்தரிக்கும் விதமாகவும், இலங்கையின் சதுப்புநிலங்கள் மற்றும் சிங்கப்பூரின் பவள சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதை வெளிப்படுத்தும் முகமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சமூகம் மற்றும் சமூக மட்டங்களில் ஆழமாக வேரூன்றிய தொடர்புகளால் வளர்க்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை எடுத்துரைத்தார்.
அத்துடன் இராஜதந்திர உறவுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவுத் தபால் முத்திரைகளை வெளியிடுவதானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பெருமளவிலான அரவணைப்பையும் நட்பையும் சந்தேகத்துக்கு இடமின்றி வெளிப்படுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

20 ஆவது அரசியல் திருத்தத்துக்கு ஆதரவளித்தபோதே ரிஷாத்தை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்!

மாகாண ஆளுநர் பதவிகளில் மாற்றம்…!