செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

பேரழிவின் விளிம்பில் இலங்கை!

இலங்கை மனிதாபிமானப் பேரழிவின் விளிம்பில் உள்ளது. எனவே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ’குவாட்’ அமைப்பு இலங்கை மீது அதீத கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் ரொபட் மெனெண்டஸ், குவாட் அமைப்பின் அங்கத்துவ நாடுகளான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அந்தக்கடிதத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிடும்போது குவாட் அமைப்பின் நான்கு அங்கத்துவ நாடுகளும் பேரவையில் ஏகோபித்து நிற்க வேண்டும் =என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994