கிழக்கு மாகாணம்செய்திகள்பிரதான செய்தி

இரு குழுக்களிடையே மோதல்; ஐவர் படுகாயம், மூவர் கைது!

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகரபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன், மூவர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கரைவலை இழுக்கும் போது இரு குழுக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியதாலேயே இந்த மோதல் இடம்பெற்றது.

இதன்போது காயமடைந்த ஐவரும் திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994