in ,

53 பேருடன் காணாமல் போன கடற்படை நீர்மூழ்கி கப்பல்!

இந்தோனேசிய கடற்படையை சேர்ந்த கேஆர்ஐ நாங்க்கல 402) (KRI Nanggala 402) எனும் நீர்மூழ்கிக் கப்பல் 53 வீரர்களுடன் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நேற்று (21) பாலி தீவிற்கு வடக்கே குறித்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கப்பலைக் கண்டுபிடிக்க போர் கப்பல்களை அனுப்பி இருப்பதாக இந்தோனேசிய இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிடமும் கப்பலின் தேடுதல் பணிக்கு உதவி கேட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலி தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் நீர்மூழ்கிக் கப்பல் காணாமற்போயுள்ளது.

கப்பல் மூழ்கியதில் இருந்து மூன்று நாட்களுக்கு ஒட்சிஜன் போதுமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

மீளக்கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி நாளை திறப்பு!

இரு நிகழ்வுகளை கட்டுப்படுத்த திட்டம் முன்வைப்பு!