காலில் முள் குத்திய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

காலில் முள் குத்திய இளைஞன் ஒருவர் நேற்றுக் காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் குத்தியுள்ளது. இருப்பினும் காலில் தைத்த முள்ளைக் காணவில்லை, முள் குத்திய இடத்தில் வலி மாத்திரம் காணப்பட்டது.

வலியால் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து அவர் கடந்த 9 ஆம் திகதி யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.

Exit mobile version