செய்திகள்வவுனியா

வவுனியாவில் எரிபொருள் அட்டை நடைமுறை!

வவுனியாவில் பெற்றோல் விநியோகத்துக்கு எரிபொருள் அட்டை நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எரிபொருள் அட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் அட்டை வாகன இலக்கங்களுடன் நிகழ்நிலையில் பதிவு செய்யப்படவுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட சிலர் அதிகளவு பெற்றோலை பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்று விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

எரிபொருள் அட்டை நேற்றுமுன்தினம் தொடக்கம் வழங்கப்பட்டு இந்த வாரம் முதல் விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282