உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்தி

விண்வெளிக்கு ஆய்வுகூடம் சீனா செலுத்தி வெற்றிகரம்!

மெங்டியன் என்கிற 2-ஆவது ஆய்வுகூட அமைப்பை நேற்றுமுன்தினம் சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

விண்வெளியில் ‘தியான்ஹே’ என பெயரிட்டு புதிய விண்வெளி நிலையம் ஒன்றை சீனா அமைத்து வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

இதற்காக சீன விண்வெளி வீரர்கள் சூழற்சி முறையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் மெங்டியன் என்கிற ஆய்வுகூட அமைப்பை சீனா நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த ஆய்வுகூட அமைப்பு நுண் புவியீர்ப்பு விசையை படிக்கவும், திரவ இயற்பியல், பொருள் அறிவியல், அடிப்படை இயற்பியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266