செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் ஜூலை 1 இல் எரிபொருள் பங்கீட்டு அட்டை நடைமுறை!

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் எரிபொருள் விநியோகத்தக்கு பங்கீட்டு அட்டை முறை அறிமுகம் செய்யப்படுகின்றது.

மக்கள் தமக்கான பதிவுகளை பிரதேச செயலகங்களில் மேற்கொண்டு எரிபொருள் அட்டையை பெற முடியும். அரச பணியாளர்கள் தமது திணைக்கள தலைவர் ஊடாக மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

அத்துடன் அத்தியாவசிய சேவைக்காக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள ஒரு ப.நோ.கூ.ச (MPCS) நிரப்பு நிலையம் செயற்படும்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266