கொடிகாமம்- கச்சாய் வீதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி அஞ்சலக வீதியைச் சேர்ந்த திருப்பதி டிலக்ஸன் (வயது- 26) என்பவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞர் தனது சகோதரருடன் கொடிகாமம் கச்சாய் வீதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற வேளையில், ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
இதன்போது காயமடைந்த இளைஞர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.