செய்திகள்யாழ்ப்பாணம்

ஏனைய அரச அலுவலர்களுக்கும் எரிபொருள் வழங்க   நடவடிக்கை; மாவட்டச்செயலர் உறுதி!

யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய அரச திணைக்கள அலுவலர்களுக்கும் எரிபொருள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில்  நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிரதேச செயலக
உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டது. எனினும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிலையத்தில் காத்திருந்து எரிபொருள் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இது தொடர்பில் மாவட்டச்செயலரிடம்  வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதேச செயலகங்கள் சிலவற்றால் தமது பிரதேசங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஏனைய அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் தேவை அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994