in

மாடு கடத்தல் வழக்கில் அதிகார துஷ்பிரயோகம்! மன்­னார் தவி­சா­ளரை பதவி நீக்­கி­னார் ஆளு­நர்!

மாடு கடத்தல் வழக்கில் அதிகார துஷ்பிரயோகம்! மன்­னார் தவி­சா­ளரை
பதவி நீக்­கி­னார் ஆளு­நர்!

மன்­னார் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் சாகுல் கமீது முஹம்­மது முஜா­ஹிர், பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் மற்­றும் சபை அங்­கத்­த­வர் ஆகிய பத­வி­களிலிருந்து நீக்­கப்­பட்­டார்.
வடக்கு மாகாண ஆளு­நர், அவ­ரைப் பதவி நீக்­கி­யுள்­ளார். அது குறித்த விசேட வர்த்­த­மா­னிப் பத்­தி­ரிகை நேற்­று­மாலை வெளி­யா­கி­யுள்­ளது.

பிர­தேச சபை­கள் சட்­டத்­தின் பிர­கா­ரம், தவி­சா­ள­ரி­டம் தகு­தி­யின்­மை­கள் உள்­ள­னவா என்­பது பற்றி விசா­ர­ணை­செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக ஓய்­வு­பெற்ற நீதி­ அ­லு­வ­ல­ர் கந்­தையா அரி­ய­நா­ய­கம் தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட தனி­ந­பர் விசா­ர­ணைக் குழு­வில் விசா­ரணை செய்­யப்­பட்டு வாதித்­த­ரப்­பின் சாட்­சி­யங்­க­ளைக் கவ­னத்­தில் கொண்­ட­தன் பின்பு தனி­ந­பர் விசா­ர­ணைக் குழு­வின் அவ­தா­னிப்­புக்­கள் மற்­றும் தீர்ப்­புக்­கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.
அந்த இறுதி அறிக்­கை­யின் பிர­கா­ரம்,

சாகுல் கமீது முஹம்­மது முஜா­ஹிர், மன்­னார் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் என்ற வகை­யில் அந்­தப்­ப­த­வி­யில் பணி­கள், கட­மை­களை நிறை­வேற்­றும்­போது பிர­தேச சபை­கள் சட்­டத்­தின்­படி குற்­றங்­கள் புரிந்­தார் என்­ப­தற்கு போது­மான சாட்­சி­யங்­கள் உள்­ளன என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
எனவே, பிர­தேச சபை­கள் சட்­டத்­தின் 185 (1) உப பிரி­வு­க­ளின் மூலம் எனக்­க­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளின் பிர­கா­ரம் வடக்கு மாகா­ணத்­தின் ஆளு­நர் பியன்­சியா சறோ­ஜி­னி­தேவி மன்­மத ராஜா சார்ள்ஸ் ஆகிய நான், மன்­னார் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் சாகுல் ஹமீது முகம்­மது முஜா­ஹீரை 14ஆம் திகதி தொடக்­கம் (இன்று) பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் மற்­றும் சபை அங்­கத்­த­வர் பத­விகளிலிருந்து நீக்­கம் செய்­கி­றேன்.” என்று வர்த்­த­மானி பத்­தி­ரி­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னாள் ரிஷாத் பதியூதினின் தலைமன்னார் பண்ணையில் பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் பெட்டியும் மாடு கடத்தல் வழக்கில் தலைமன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் மன்னார் நீதிவான் நீதிமன்றில் உழவு இயந்திரமும்  பெட்டியும் தடுத்துவைக்கப்பட்டிருந்தன.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தின் உதவியுடன் அவை பிரதேச சபைக்கு வழங்கப்பட்டவை என கடிதம் பெறப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படதற்கு அமைய உழவு இயந்திரமும் பெட்டியும் விடுவிக்கப்பட்டன.

எனினும் அந்த உழவு இயந்திரமும் பெட்டியும் பி்ரதேச சபையினால் பயன்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டு மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களினால் விசாரணை கோரப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் முன்னாள் மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் முன்னிலையில் நடைபெறும் தனிநபர் குழுவை வடக்கு மாகாண ஆளுநர் நியமித்திருந்தார்.

முன்னாள் நீதிபதி முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் பல தரப்பட்டவர்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. அதன் நிறைவில் விசாரணை அறிக்கை வடக்கு மாகாண ஆளுநரிடம் ஓகஸ்ட் 2ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

அந்த விசாரணை அறிக்கையில் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டப்பிரிவு உப பிரிவு 185 (1) (இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட அதிகார மீறல் குற்றத்தை மன்னார் பிரதேச சபை தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் இழைத்துள்ளார் என குறிப்பிடப்பட்டது. அதனடிப்படையில் அவர் பதவி நீக்கப்படுகிறார் என வடமாகாண ஆளுநர் அரசிதழ் ஊடாக பணித்துள்ளார்.

ஆணை­யா­ள­ரின் அறிக்­கையை வர­வேற்­கி­றது கூட்­ட­மைப்பு!

பட்­ட­தாரி பயி­லு­நர்­க­ளின் பயிற்சி 6 மாதங்­கள் நீடிப்பு!