செய்திகள்தலைப்புச் செய்திகள்பிந்திய செய்திகள்பிரதான செய்தி

மாணவர்களிடையே தொழுநோய் பரவல்

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்து வருகின்றது என சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

நாடளாவிய ரீதியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் தொடங்கப்பட்ட திட்ட ஆய்வறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

நாட்டில் இரண்டு வகையான தொழுநோய் பரவுகிறது, அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை.

இவற்றில் நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டவற்றில் 60 வீதமானவை பரவுகின்ற தொற்றுக்கள்.

அத்துடன் பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளது.

இந்த வருடம் தொழுநோயாளிகளில் 15வீதம் பாடசாலை மாணவர்கள் எனப் பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

அவர்களிடம் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 பேரும், கம்பஹாவில் 114 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 82 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266