செய்திகள்யாழ்ப்பாணம்

பிரதேசசெயலக அலுவலர்களுக்கு எரிபொருள் அட்டை! 

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு எரிபொருள் பெறுவதற்குரிய அட்டை மாவட்டச் செயலகத்தால் பிரதேச செயலகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய தென்மராட்சிப் பிரதேச செயலக பிரிவின் அனைத்து அலகுகளிலும் சுமார் 500 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அலுவலர்களுக்கு பங்கீட்டு அட்டை அவர்கள் கடமையாற்றும் அந்தந்த அலகின் தலைவர் மற்றும்  திணைக்களத் தலைவரால் உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது.
இதேவேளை பொதுமக்கள் எரிபொருள் பெறுவதற்குரிய அட்டை இன்னும் வரவில்லை. அவை வந்ததும் அந்தந்த கிராம அலுவலர் ஊடாக  எரிபொருள் அட்டை  வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994