செய்திகள்பிரதான செய்தி

தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்ற சமுர்த்திப் பயனாளிகள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு! 

தொழிற்பயிற்சி அதிகார சபையால் நடத்தப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் சமுர்த்திப் பயனாளிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முதல் கட்டமாக ஜப்பான் நாட்டுக்கு ஒரு தொகுதியினரை அனுப்ப  சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தால் தகைமையுள்ளவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட சமுதாய அடிப்படையிலான அமைப்பின் உறுப்பினராகவும், உடல் உள ஆரோக்கியம் உள்ளவராகவும், உடலில் பச்சை குத்தியமைக்கான அடையாளம் இல்லாத குறைந்த வருமானம் உடைய கு்டும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்படவுள்ளனர்.

அத்துடன் இவர்கள் வெளிநாடுகளுக்குச்  செல்வதற்கு பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணை ஒப்புதல் அளிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் தகைமையுள்ள இருவரைத் தெரிவு செய்து அனுப்பி வைக்குமாறு  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் அனைத்துப் பிரதேச சமுர்த்தி அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களும் விண்ணப்பப்படிவமும் அந்தந்தப் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994