in ,

தனிமைப்படுத்தல் விதிமீறிய நபருக்கு 45,000 ரூபா தண்டம் மல்லாகம் நீதிமன்று விதித்தது!

தனிமைப்படுத்தல் விதிமீறிய நபருக்கு 45,000 ரூபா தண்டம் மல்லாகம் நீதிமன்று விதித்தது!

பயணத் தடை நடைமுறையிலுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி வீதியில் பயணித்தவருக்கு மல்லாகம் நீதிவான் மன்று 45 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில், வட்டுக்கோட்டை சித்தன்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வட்டுக்கோட்டை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர்.

அதன்போது சாரதி அனுமதிப்பத்திரம், பயண அனுமதிப்பத்திரம், முகக் கவசம் அணியாமை ஆகிய குற்றங்களின் அடிப்படையில் பொலிஸார், குறித்தநபரை கைதுசெய்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனைத்தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

நேற்றுமுன்தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர், தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து அனைத்துக் குற்றங்களுக்குமாக அவருக்கு 45 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

தண்ணீர் கொடுப்பனவை செலுத்த நடமாடும் சேவை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஏற்பாடு!

புத்தூரில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!