கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல்

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பொது மக்களிடம் திருடப்பட்ட ஆறு பவுன் தங்க நகைகளும் மடி கணணி என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (18) இரவு கைது செய்யப்ட்டுள்ளதாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சர் அலுவலக விஷேட பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எம்.சியாம் தெரிவித்தார்.

இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக வாகரை பகுதியில் நடமாடுவதாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உள்ள விஷேட பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரையும் அவரிடம் இருந்து ஆறு பவுன் எடையுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் மடி கணணி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விஷேட பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எம்.சியாம் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் இதற்கு முதலும் பல திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புபட்டு நீதி மன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தங்க நகைகள் மற்றும் மடி கணணியை உரியவர்கள் அடயாளங்களை தெரியப்படுத்தி பெற்றுக் கொள்வதற்கு வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜயசுந்தரவின் வழிகாட்டலில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, பேத்தாளை, கல்குடா கிண்ணயடி, வாகரை போன்ற பகுதிகளில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்காக விஷேட பிரிவு இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுபானம் விற்பனை செய்தவர் கைது!

கதிர்

யாத்திரை மேற்கொண்ட 9-பேர் கைது

Tharani

வவுனியாவில் திடீர் இராணுவ சோதனை!

G. Pragas