in ,

பிள்ளையார் கோயில் குளத்துக்கு பௌத்த கொடியின் வர்ணங்கள்! மக்கள் கடும் அதிருப்தி!

பிள்ளையார் கோயில் குளத்துக்குபௌத்த கொடியின் வர்ணங்கள்!                                        மக்கள் கடும் அதிருப்தி தடுத்து நிறுத்தினார் மேயர்!

யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு அருகே உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான பிள்ளையார் குளத்தின் தடுப்புக் கம்பிகளில் பூசப்பட்ட வர்ணத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் அந்தப் பகுதிச் சென்ற நிலையில், பௌத்த ஒத்த நிறங்கள் பூசப்பட்டுள்ளன என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தக் குளம் உலக வங்கியின் அனுசரணையுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றது. 1996 ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த குளததின் பரப்பளவு 2013 ஆண்டு மீள அளக்கப்பட்ட நிலையில்1.26(0.5078) ஏக்கராக குறைந்திருந்தது. தற்போது புனரமைக்கும் போது குளத்திலிருந்து தூர்வாரப்பட் மண் மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட குழுவினர் அந்த பகுதிக்குச் சென்றிருந்தனர். அவர்கள் பார்வையிட்டுச் சென்ற பின்னர் பௌத்த கொடியின் வர்ணத்தை ஒத்த வர்ணம் குளத்தின் தடுப்புக் கம்பிக்கு பூசப்பட்டுள்ளது. அந்த வர்ணங்கள் தொடர்பாக பிரதேச மக்களால் யாழ் மாநகரசபை முதல்வருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளை தொடர்பு கொண்டு யாழ். மாநகரசபை முதல்வர் பேசியிருந்தார்.

குள சீரமைப்புக்காக அந்தப் பகுதி மக்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது என்றும், அந்த குழுவின் சம்மதம் பெற்ற வர்ணங்களே தீட்டப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து வர்ணம் தீட்டும் பணியை இடைநிறுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் கேட்டுக் கொண்டார். தற்போது வர்ணம் தீட்டும் பணிகள் நிறுத்தப்பட்டு, புதிதாக வர்ணம் தீட்டப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தடுப்­பூசி பெற்­றுக்­கொள்­ளா­த­வர்­களே அதி­க­ள­வில் சாவு!- வடக்கு மாகாண சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர்!

ஐ.நா. கண்காணிப்பை நிராகரிக்கமாட்டோம் அரசு தெரிவிப்பு!