செய்திகள்தலைப்புச் செய்திகள்மலையகம்

காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு!

காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு!

புசல்லாவை –உடகம, அமுனுவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்று காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை நவோதவிட்ட பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது நண்பருடன் நேற்று (06) மாலை குளிக்கச்சென்றிருந்த சிறுவனே நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற பகுதியில் இருவரும் குளிக்கச்சென்ற போது,சிறுவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார், மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994