சினிமா

திடீரென தள்ளிப்போன வாரிசு.. கவலையில் ரசிகர்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ புக்கிங் கூட சமீபத்தில் துவங்கி பட்டையை கிளப்பி வருகிறது.

இப்படத்தின் தெலுங்கு வெர்சன் வாரசுடு 11ம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், 11ம் தேதி வாரசுடு வெளியாகாது. வருகிற 14ம் தேதி தான் வாரசுடு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

11ம் தேதி தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவருவதால் இப்படியொரு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வாரசுடு படத்தை தெலுங்கில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சற்று கவலையில் உள்ளனர்.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282