கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்!
கரடி தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு கொக்காவில் காட்டுப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விறகு வெட்ட சென்ற குடும்பஸ்தரை இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் முறிகண்டி பகுதியைச் சேர்த்த 4 பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.