in

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்குச் சாத்தியம்!

பிற்பகல் வேளையில் மழைக்குச் சாத்தியம்!

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக்கூடும். மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தடுப்பூசியால் தொற்றுகள், இறப்புகள் குறைவடைகின்றன!

நாடாளுமன்றில் இன்று சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் விவாதங்கள்!