in ,

தியாக தீபம் திலீ­ப­னின் நினைவேந்தலுக்கு மட்டு.நீதி­மன்று தடை!

தியாக தீபம் திலீ­ப­னின் நினைவேந்தலுக்கு மட்டு.நீதி­மன்று தடை!

தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினை­வேந்­த­லுக்கு, மட்­டக்­க­ளப்பு நீதி­வான் நீதி­மன்­றம், நேற்­று­முன்­தி­னம் தடை­உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.
“தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் உறுப்­பி­ன­ரான திலீ­ப­னின் நினை­வேந்­தல் 15ஆம் திகதி (நேற்­று­முன்­தி­னம்) தொடக்­கம் எதிர்­வ­ரும் 26ஆம் திக­தி­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் நிலைய புல­னாய்வு உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் நம்­ப­க­ர­மான தக­வல் கிடைத்­துள்­ளது.
இவ்­வா­றான நிகழ்வு நடந்­தால் இதற்கு எதி­ரா­ன­வர்­கள், எதிர்ப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­ட­வாய்ப்பு உள்­ளது.

அது­மட்­டு­மன்றி, நாட்­டில் கொரோனா நோய்த் தாக்­கம் அதி­க­ரித்­துள்­ள­தால், அதைக் கட்­டுப்­ப­டுத்­தும் முக­மாக சுகா­தார நட­வ­டிக்­கையை நாட்டு மக்­கள் கடைப்­பி­டிக்க வேண்­டிய அவ­சி­யம் காணப்­ப­டு­கின்­றது. எனவே, இவ்­வா­றான நினை­வேந்­தல் நட­வ­டிக்­கைக்கு நீதி­மன்று தடை உத்­த­ரவு பிறப்­பிக்­க­வேண்­டும்” என்று காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்­ப­தி­காரி கஜ­நா­யக்கா மட்­டக்­க­ளப்பு நீதி­வான் நீதி­மன்­றில் விண்­ணப்­பித்­தார்.
அதனை ஏற்­றுக்­கொண்ட நீதி­மன்று, நினை­வேந்­த­லுக்கு, பொலி­ஸார் கோரி­ய­படி தடை உத்­த­ரவு விதித்து கட்­டளை பிறப்­பித்­தது.

ஊரடங்கை நீடிக்கவேண்டும்! அச்சம் இன்னும் நீங்கவில்லையென விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டு!

வவு­னி­யா­வில் கொரோ­னா­வால் ஐந்து பேர் சாவு!