in ,

அங்­க­ஜ­னின் செயற்­பாட்­டால் அதி­கா­ரி­க­ளி­டையே குழப்­பம்!

அங்­க­ஜ­னின் செயற்­பாட்­டால் அதி­கா­ரி­க­ளி­டையே குழப்­பம்!

வரவு – செல­வுத் திட்ட முன்­மொ­ழி­வு­கள் தயா­ரிப்­புக்கு அமைச்­சால் வெளி­யி­டப்­பட்ட சுற்­ற­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­ட­தற்கு அமை­வாக யாழ் மாவட்­டத்­தி­லுள்ள பிர­தேச செய­லர்­க­ளால் பணி­யாற்ற முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. மாவட்ட ஒருங்­கி­ணைப்பு இணைத் தலை­வர் அங்­க­ஜன் இரா­ம­நா­தன், பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. ஆனா­லும், கிரா­மத்­து­டன் கலந்­து­ரை­யா­டல் திட்­டத்­துக்கு அமை­வாக கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு அவர் நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தன் கார­ண­மாக அதி­கா­ரி­க­ளுக்கு குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 15 பிர­தேச செய­லர் பிரி­வு­க­ளுக்­கும் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுத் தலை­வர்­கள் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.
வரவு – செல­வுத் திட்ட முன்­மொ­ழி­வுத் தயா­ரிப்­பில் கிரா­மத்­துக்கு 3 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கு­ரிய திட்­டங்­களை அடை­யா­ளம் காணும் நட­வ­டிக்­கை­கள் அந்­தந்­தப் பகுதி பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழு இணைத் தலை­வ­ரின் பங்­கேற்­பு­டன் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும் என்று நிதி அமைச்சு சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளது. அதில் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழு இணைத் தலை­வ­ரின் பங்­கேற்­புப் பற்றி எது­வும் கூறப்­ப­ட­வில்லை.

ஆனால் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில், மாவட்ட ஒருங்­கி­ணைப்பு இணைத் தலை­வர் இ.அங்­க­ஜன், பிர­தேச ஒருங்­கி­ணைப்பு இணைத் தலை­வ­ரின் பங்­கேற்­பு­டன் நடத்­த­வேண்­டிய கூட்­டத்தை இன்­றைய தினம் யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லர் பிரி­வில் நடத்­த­வுள்­ளார். சுற்­ற­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­ப­டாத ஒன்றை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பில் அதி­கா­ரி­கள் குழப்­ப­ம­டைந்­துள்­ள­னர்.

கொரோ­னா­வால் யாழில் ஒரு­வர் சாவு! சுகா­தா­ரத் தரப்­பி­னர் விசேட அறிவித்தல்!

வாளு­டன் ‘டிக்­டொக்’ இளை­ஞன் கைது சங்­கா­னை­யில் சம்­ப­வம்!