செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் வெடி பொருட்கள் மீட்பு!

யாழில் வெடி பொருட்கள் மீட்பு!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டதரிப்பு பகுதியில் பாழடைந்த கிணற்றை துப்பரவு செய்த பொழுது வெடிபொருட்களை அவதானித்து இளவாலை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று குறித்த குண்டை மீட்டு செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பேலி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து 36 கைக்குண்டுகள் கொடிகாமம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உள்ள காணியில் துப்பரவு பணிகள் இடம்பெற்ற நிலையில் வெடிபொருட்களை அவதானித்து கொடிகாமம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 4வகையான 36 கைக்குண்டுகள் காணப்படுவதாகவும் நீதிமன்ற அனுமதி பெற்று குறித்த வெடி பொருட்களை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282