செய்திகள்முல்லைத்தீவு

தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு ஜப்பானால் நவீன இயந்திரங்கள்!

முல்லைத்தீவு-விசுவமடுக்குளம் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தில் இயங்கிவரும் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக ஜப்பானின் 2 மில்லியன் ரூபா நிதியில் நவீன இயந்திரங்கள் நேற்று வழங்கப்பட்டன.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, முல்லைத்தீவு-விசுவமடுக்குளம் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்துக்கு நேற்று  பயணம் மேற்கொண்டார்.
அதன்போதே ஜப்பானிய உதவியில் இயங்கிவரும் தேங்காய் எண்ணெய் உற்பத்திச் செயற்பாடுகளைப் பார்வையிட்டு இயந்திரங்கள் வழங்கினார்.

அத்துடன் தேங்காய் எண்ணெய் உற்பத்திக் கட்டிடத்துக்கான நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்தார். நிகழ்வில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கேரத், பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத் தலைவர், பணியாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,195