ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும்! வேலனை பிரதேச சபையில் தீர்மானம்!

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும்! வேலனை பிரதேச சபையில் தீர்மானம்!

வேலனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வேலனை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.இதன்போது சபையின் அமர்விற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 8உறுப்பினர்கள் ,ஐக்கியதேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் என 9உறுப்பினர்கள் கையில் கறுப்பு பட்டி அணிந்து வருகை தந்தனர்.

ஈ.பி.டி.பி .உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் நீங்கள் எங்களிடமும் கூறியிருந்தால் நாங்களும் கறுத்த பட்டியினை அணிந்து வந்திருப்போம் என தெரிவித்தனர் .

இதன்போது இந்த நாடு அழிந்தது டக்ளஸ் போன்ற மணற்கொள்ளையர்களால் எனவும் சிறீதர் தியேட்டரின் 2கோடிரூபா மின்சார கட்டணத்தை கட்டினாலே போதும் எனவும் கோட்டா கோ கோம் என்று சபையில் கூச்சலிட்டனர்.

இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என பிரேரணை முன்வைக்கப்பட்டது,  சபையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் ”இந்த நாட்டினுடைய பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வேலனை பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக வேலனை பிரதேச சபை தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தீர்மானத்தை வாசித்தார்.

 

Exit mobile version