பிரதான செய்தி

யாழ்ப்பாணத்து ஹோட்டல் ஒன்றில் உணவில் மோசடி.!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற நபர், சாப்பிடுவதற்காக ஓடர் செய்த உணவில் ,பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டதாக தெரிவித்து,தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்ளில் விழிப்புணர்வாக பகிர்ந்துள்ளார்

பயங்கர பசி
யாழ்பாணம் பேருந்து நிலையத்தில் இறங்கி ஓர் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன்.

வெயிட்டர் வந்து “என்ன சாப்பாடு வேண்டும்” என்றார். என்ன இருக்கு என்றேன். சோறு கொத்து, ரைஸ், பிரியாணி என்றும் கோழி, கணவாய், இறால், மீன் கறி என்றும் அடுக்கி கொண்டே போனார்.

பரோட்டா இருக்கா என்றேன். ஆம் என்றவரிடம் பரோட்டாவும் சிக்கன் கறியும் என்றேன். கொண்டு வந்து வைத்தார்.

எடுத்து சாப்பிட தொடங்க சிக்கனில் ஒரு வகையான பழுத்தடைந்த மனம் வந்தது. இருந்தும் என்ன மனம் என்று பார்தால் மூன்று (03) நாட்களுக்கு மேலாக பிறிச்சில் வைத்து சூடாக்கி சூடாக்கி சிக்கன் தரம் கெட்டு விட்டது என்பதை உணர்ந்தேன்.

இது தொடர்பாக ஹோட்டல் காரரிடம் கூறி எதுவும் ஆக போவது கிடையாது. குறைந்த பட்சமாக அவர்கள் தவறை கூட ஏற்றுக் கொள்ள போவது கிடையாது என்றும் நினைத்தேன்.

மிஞ்சி போனால் எனது சாப்பாட்டை மீள பெற்றாலும் மீதம் உள்ள கறிகளை சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் ஆகிய யாரோ தலையில் கட்டி காசு சம்பாதிச்சால் சரி என்று இருப்பார்கள் என்பது நான்றாகவே தெரியும்.

உடனடியாக யாழ்பாண PHI க்கு call எடுத்து அறிவித்தேன். 15 நிமிடத்திற்குள் வந்தார்கள். பரிசோதித்ததில் பழுத்தடைந்த ஏனைய கறிகளும் இனங்காணப்பட்டு எச்சரித்து மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உரிய தரப்பிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் வகையில் உரிய ஹோட்டல் தரப்பு கேட்டதற்கு இணங்க பெயர் மற்றும் இதர விபரங்களை வெளிப்படுத்தாமல் தவிர்த்து உள்ளேன்.

நானும் எனக்கு என்ன இன்று நினைத்து இருந்தால் PHI க்கு அறிவிக்காமல் சென்று இருக்கலாம். ஆனாலும் இவ்வாறான உணவை சாப்பிட்டு எத்தனை பேர்கள் உபாதைப்பட்டு இருப்பார்கள்.

ஆகவே நீங்களும் இவ்வாறான சம்பவங்களை துணிந்து உரிய தரப்பிற்கு அறிவியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282