செய்திகள்பிரதான செய்தி

தெஹிவளை மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவைப் பெற்றுக்கொடுக்க 20 மில்லியன் ரூபா நிதி!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தேவையான உணவைப் பெற்றுக்கொடுக்க 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 100 வகையான பாலூட்டிகள், 110 வகையான பறவையினங்கள், 65 வகையான மீன்கள், 34 வகையான ஊர்வன, 3 வகையான ஈரூடகவாழிகள், 30 வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் 10 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன.

இவற்றுக்கு அடுத்த 5 மாதங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்வதற்காக 20 மில்லியன் ரூபா வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாளைய தினம் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 83ஆவது வருட பூர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196