செய்திகள் பிந்திய செய்திகள்

6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

பளை – அத்திரான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று (02) மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தாளையடி பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய நபர் என தெரிவிக்கும் பொலிஸார், சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அவரிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஊரடங்கு தளர்வு குறித்து வெளியானது விசேட அறிவிப்பு!

Bavan

மத்திய மற்றும் வர்த்தக வங்கிகளை திறந்து வைக்க உத்தரவு!

Tharani

மதுவால் ஒரே நாளில் கிடைத்த 163 கோடி!

G. Pragas